Redmi Note 5 Pro

Image result for redmi note 5 pro
IDOOLS Case For Xiaomi Redmi Note 5 Pro Cover Redmi Note 5 Pro Case Back Cover
18:9 ஸ்க்ரீன்... ஃபேஸ் அன்லாக்... ரெட்மீ நோட் 5 புரோ-வுக்காக காத்திருக்கலாமா?!

ஃபேஸ் அன்லாக் இருக்கிறது. ஆனால், வடிவேலு கணக்காக “முறைடா... நல்லா முறை” எனப் போராட வேண்டியிருக்கிறது. அப்போதும் அன்லாக் ஆகாமல் ஏமாற்றுகிறது. இப்படியொரு வசதி இருக்கிறது என்பதை மறந்துவிடுவது நோட் 5 ப்ரோ யூஸரின் கிட்னிக்கு நல்லது.
18:9 ஸ்க்ரீன்... ஃபேஸ் அன்லாக்... ரெட்மீ நோட் 5 புரோ-வுக்காக காத்திருக்கலாமா?!

Redmi Note 5 Pro

ரெட்மி நோட் 5 ப்ரோ. காலா படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கூட நிறைய பேருக்கு கிடைத்துவிடும். ஆனால், ஃப்ளிப்கார்ட்டில் ரெட்மி நோட் 5 ப்ரோ அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. வாங்க ஆள் இருந்தும் அந்த மொபைல் கிடைக்காமல் போவதால் அவர்களுக்கு என்ன லாபம்? ஏன் இந்த டிமாண்ட் என்பதற்கு ரெட்மியும் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். நாமும் ஃப்ளிப்கார்ட்டிலும் ரெட்மி தளத்திலும் முயற்சி செய்துவிட்டு கடைசியாக சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இருக்கும் ஷியோமி ஆஃப்லைன் ஸ்டோருக்கு சென்றோம். “6ஜிபி வேரியண்ட் மட்டும் இருக்கு. அதுவும் 2 பீஸ்தான்.” எனச் சுடச்சுட விற்றுக்கொண்டிருந்தார்கள். 16,999 தந்து ஒன்று வாங்கிக்கொண்டோம்.

வசதிகள்:

5.99 இன்ச் 18:9 2160 × 1080 டிஸ்ப்ளே
12 MP+5MP டூயல் பின்புற கேமரா மற்றும் 20  MP முன்புற கேமரா
1.8  GHz ஆக்டாகோர் ஸ்னாப்ட்ராகன் 636 புராசஸர் 
4/6 ஜிபி ரேம்
4000 mAh பேட்டரி

Redmi Note 5 pro

டிஸ்ப்ளே:(Display)

இந்த மொபைலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்த டிஸ்ப்ளே. 18:9 வீடியோ சாதாரண வீடீயோக்களைவிட அட்டகாசமான அனுபவத்தைத் தருகிறது. மொபைல் நீளமாக இருந்தாலும் கைக்கு அடக்கமான அகலத்தில் இருப்பதற்கு இந்த டிஸ்ப்ளேவும் ஒரு காரணம்.

கேமரா: (Camera)

டூயல் கேமரா இந்த விலையில் என்பது நிச்சயம் ஆச்சர்யமான விஷயம்தான். Depth effect முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே இருப்பது நல்ல விஷயம். அதன் தரமும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், பொதுவாக கேமரா குவாலிட்டி சுமார்தான். இருக்கும் நிறத்தை அப்படியே காட்டவில்லை. அழகாகக் காட்ட வேண்டுமென புகைப்படங்களில் ஒரு செயற்கைத்தன்மை ஒட்டிக்கொள்வது நன்றாக தெரிகிறது.

புராசஸர்: (Processor)

ரெட்மி மொபைல்களில் முதல் முறையாக இந்த புராசஸர் பயன்படுத்தப்படுகிறது. மொபைலின் வேகத்தில் எந்தக் குறையுமில்லை. போலவே, சூடாகிறது எனக் காலம் காலமாக சொல்லப்படும் ரெட்மி குறையும் இந்த மாடலில் இல்லை.


ரேம்: (RAM)

6 ஜிபி ரேம் என்பதால் கொஞ்சம்கூட ஹேங் ஆகாமல் இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், “ஹேங் ஆவது ஆண்டிராய்டின் பிறப்புரிமை” போல. எப்போதாவது ஹேங் ஆகிறது. ஒரு வருடம் போனால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என இப்போதே தெரிகிறது. 4 ஜிபி ரேம் மொபைலே வாங்கலாம். இரண்டுக்கும் வேகத்தில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

4000 mAh பேட்டரி: (Battery)

ரெட்மிக்கு பேட்டரி சச்சின்போல. ஆனால், இந்த மாடலில் மட்டும் அது சற்றே சறுக்கியிருக்கிறது. வைஃபை, ப்ளூடூத், என எதை ஆன் செய்தாலும் 24 மணி நேரம் சார்ஜ் நிற்கும் ரெட்மி மொபைலில். ஆனால், இதில் அது நடக்கவில்லை.  Face unlock போன்ற வசதிகள் இருப்பதாலோ என்னவோ, 15 - 18 மணி நேரத்தில் சார்ஜரைத் தேடுகிறது நோட் 5 ப்ரோ. குயிக் சார்ஜும் இல்லையென்பதால், 1 மணி நேரமாவது சார்ஜ் போட வேண்டும். அதுவும் ரெட்மி தந்த சார்ஜ் கேபிள் கிடைக்காமல் வேறு சார்ஜர் என்றால் 4 மணி நேரம் கூட சார்ஜ் ஆகிறது.

மற்ற வசதிகள்: (Other Facilities)

ஃபேஸ் அன்லாக் இருக்கிறது. ஆனால், வடிவேலு கணக்காக “முறைடா...நல்லா முறை” எனப் போராட வேண்டியிருக்கிறது. அப்போதும் அன்லாக் ஆகாமல் ஏமாற்றுகிறது. இப்படியொரு வசதி இருக்கிறது என்பதை மறந்துவிடுவது நோட் 5 ப்ரோ யூஸரின் கிட்னிக்கு நல்லது.

ப்ளஸ்:
18:9 டிஸ்ப்ளே
டூயல் கேமரா
விலை ’ஓகே’ தான்:

ரேம்
பேட்டரி
டிசைன்

மைனஸ்:

  1. Type C போர்ட் இல்லாதது
  2. மொக்கையான ஃபேஸ் அன்லாக்
  3. ஃபோன் கிடைப்பதில் இருக்கும் சிரமம்
  4. டூயல் கேமராதான் உங்கள் விருப்பம் என்றால் காத்திருந்து இந்த மொபைலை வாங்கலாம். இல்லையேல், ரெட்மி நோட் 5 வாங்கிவிடலாம். நல்ல பேட்டரி பேக்கப், விலை குறைவு, உடனே கிடைக்கும் என அதில் இன்னும் பல சாதகங்கள் உண்டு.


Comments

Popular posts from this blog